South India Tamil Nadu Spirituality & goodness pod Podcast
South India Tamil Nadu Spirituality & goodness pod
Adithya Raghavan
How does a Stone become God. - episode of South India Tamil Nadu Spirituality & goodness pod podcast

How does a Stone become God.

8 minutes Posted Sep 17, 2021 at 1:59 pm.
0:00
8:04
Download MP3
Show notes
"பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? -
ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்*
கருங்கல் ஒன்று சிற்பமாவது
சாதாரண விஷயமல்ல.
கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி,
கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும்
கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து
விட முடியாது.
அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.
சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது
"சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.
அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.
இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.
இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள்.
அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.
இதுவும் 48 நாட்கள் தான்.
நவ தானியங்களோடு
நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது.
ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
ஜலவாசம்,
தான்ய வாசம்,
பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.
பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம்.
பின்னர் வஸ்திர வாசம்,
அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும்.
அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும்.
இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால்
ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது.
எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி...
ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள்.
நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.
நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.
தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.
அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும்.
அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.
அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..."
என்றார்.
தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு
நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.
இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது.
அதன்பிறகு, 7 நாட்